Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கடைக்கு சென்ற உரிமையாளர்…. ஊழியர் செய்த செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

1 லட்ச ரூபாய் பணத்தை திருடிய ஓட்டல் ஊழியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் உம்மர் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் கருவாட்டு கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் காலையில் கடைக்கு சென்ற உம்மர் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த 1 லட்ச ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து உம்மர் அளித்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கூடலூர் பகுதியில் வசிக்கும் சலீம் என்பவரை பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் கருவாட்டுக் கடைக்கு அருகில் இருக்கும் ஒரு ஓட்டலில் ஊழியராக வேலை பார்ப்பதும், கடையிலிருந்து 1 லட்ச ரூபாய் பணத்தை திருடியதும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சலீமை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |