Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ஏமாந்துபோன சிறுமி…. வாலிபரின் கொடூர செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை பகுதியில் ராஜா முகமது என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தைகளை கூறி அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு ராஜா முகமதுவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Categories

Tech |