சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த வியாபாரியை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மடத்துக்குளம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மளிகை கடையில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அந்த கடைகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது குமாரசாமி என்பவர் கடையில் போதை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து குமாரசாமியை காவல்துறையினர் கைது செய்ததோடு, அவரிடமிருந்த புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.