வாலிபர் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ளபாறக்கொல்லி ஆதிவாசி கிராமத்தில் கேத்தன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணி என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மணி தனது நண்பர்களுடன் கோழிகண்டி என்ற இடத்தில் இருக்கும் தடுப்பணையில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அங்கு குளித்து கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக மணி தண்ணீரில் மூழ்கி விட்டார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் மணியை தேடும் பணியில் ஈடுபட்டுயுள்ளனர். ஆனால் தடுப்பணையில் முழு கொள்ளளவு தண்ணீர் இருந்ததால் அவரை கண்டுபிடிக்க இயலவில்லை. இதனால் தண்ணீரை வெளியேற்றும் வகையில் ஒரு பகுதியில் துளைகள் இடப்பட்டு தண்ணீர் பாதியளவு குறைந்த பிறகு தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு மணியின் சடலத்தை மீட்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.