Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பேருந்தில் சென்ற பிரேமா…. மர்ம நபரின் கைவரிசை…. போலீஸ் விசாரணை….!!

பெண்ணிடம் நகை பறித்து சென்ற மர்ம நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை போலீஸ் குடியிருப்பில் பிரேமா என்பவர் வசித்து வருகிறார். இவர் மடத்துக்குளத்தில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 15-ஆம் தேதி நகையை அடகு வைப்பதற்காக நீலாம்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு சென்றுள்ளார். இதற்காக பிரேமா உடுமலை நூலகம் அருகில் பஸ்சில் ஏறி மத்திய பேருந்து நிலையம் சென்றடைந்தார்.

அப்போது பிரேமா வைத்திருந்த பர்ஸ் காணாமல் போனதை கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். அதில் இருந்த 5 பவுன் நகையை யாரோ மர்ம நபர்  திருடி சென்றது பிரேமாவுக்கு தெரியவந்தது. இதுகுறித்து பிரேமா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |