டயர் வெடித்ததால் தாறுமாறாக ஓடிய கார் கோவிலுக்குள் புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் பாலகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கரையான்சாவடிலிருந்து தனது காரில் திருவள்ளூருக்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் சென்றுகொண்டிருக்கும் போதே தீடிரென காரின் டயர் வெடித்துவிட்டது. இதனால் கட்டுபாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக ஓடி அங்கு நிறுத்தப்பட்டிருந்த பைக்குகள் மீது மோதிவிட்டது. மேலும் கார் அருகிலிருந்த கோவிலுக்குள் புகுந்து விட்டது.
இதனால் கோவிலுக்குள் படுத்திருந்த பூசாரியான ராஜேஷின் காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் ஓடிவந்து காயமடைந்த பூசாரி ராஜேஷ் மற்றும் பாலகுமாரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள்கள், குடியிருப்புகள் கட்டுவதற்காக வாடகைக்கு கொடுக்கப்படும் ஏணிகள் வைத்துள்ள கடை, சிறிய கோவில் மற்றும் காரின் முன் பக்கம் போன்றவை சேதமடைந்துள்ளது.
இதனையடுத்து பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் விபத்துக்குள்ளான காரினை அப்புறப்படுத்தியுள்ளனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.