சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 12 பேரை காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளரான சசாங் சாய் உத்தரவின்படி சட்டவிரோதமாக மது, கள்ளச்சாராயம் மற்றும் கள் விற்பனையை தடுக்கும் வகையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த 12 பேரை காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த மதுபான பாட்டில்கள் மற்றும் 1,800 ரூபாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.