Categories
தேசிய செய்திகள்

தந்தையின் கள்ளத்தொடர்பே… “எங்களின் சாவுக்கு காரணம்”… 9 மாத குழந்தை உட்பட ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை…!!!!

பெங்களூருவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்திருந்த நிலையில் அவர்கள் அறையிலிருந்து 3 தற்கொலை கடிதம் கைப்பற்றப்பட்டுள்ளது.

பெங்களூரு பேடரஹள்ளி காவல் எல்லைக்கு உட்பட்ட திகளரபாளையா பகுதியை சேர்ந்த சங்கர் என்பவர் பத்திரிகை ஒன்றை நடத்தி வருகிறார். இவரின் மனைவி பாரதி. இவர்களுக்கு சிஞ்சனா, சிந்து ராணி என்ற 2 மகள்களும், மதுசாகர் என்ற மகனும் உள்ளனர். சிஞ்சனா, சிந்து ராணி ஆகிய இருவருக்கும் திருமணமான நிலையில் அவர்கள் தங்களது கணவருடன் வாழாமல் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தனர். சிஞ்சனாவுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. சிந்துராணிக்கு 9 மாதங்கள் ஆன ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் கடந்த 17ஆம் தேதி பாரதி, சிஞ்சனா, சிந்து ராணி, மதுசாகர் ஆகியோர் வீட்டில் பிணமாக தொங்கி இருந்தன. இதில் சிந்துராணியின் 9 மாத குழந்தை பசியால் அழுது உயிரிழந்தது தெரியவந்தது.

பின்னர் சிஞ்சனாவின் 3 வயது குழந்தை மட்டும் இதில் உயிர்தப்பியது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த தற்கொலை சம்பந்தமாக சங்கரிடம் விசாரணை செய்தபோது மகள்கள் இருவரும் கணவருடன் சேர்ந்து வாழாமல் வீட்டிற்கு வந்ததும், மகனுக்கு பார் மற்றும் ரெஸ்டாரன்ட் வைத்துக் கொடுக்கும் விவகாரம் தொடர்பாக மனைவிக்கும் தனக்கும் பிரச்சினை ஏற்பட்டதால் இவர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர் என்று அவர் தெரிவித்தார். பின்னர் சங்கர் வீட்டில் நேற்று காலை உதவி போலீஸ் கமிஷனர் தலைமையிலான குழு திடீரென்று சோதனை நடத்தினார்கள்.

அப்போதும் மது சாகர் தற்கொலை செய்து கொண்டிருந்த அறையில் இருந்து ஒரு கடிதம் எடுக்கப்பட்டது. அதையடுத்து சிஞ்சனா மற்றும் சிந்துராணி தற்கொலை செய்து கொண்டிருந்த மற்றொரு அறையில் இருந்து தனித்தனியாக இரண்டு கடிதம் எடுக்கப்பட்டது. ஒட்டு மொத்தமாக மூன்று கடிதங்கள் காவல்துறைக்கு கிடைத்தது. மது சாகர் எடுத்து இருந்த கடிதத்தில் தனது தந்தை கள்ளத்தொடர்பு வைத்திருந்ததால், இந்த விவகாரம் தொடர்பாக தந்தைக்கும் தாய்க்கும் தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்ததால், மனவேதனையில் தற்கொலை செய்து கொள்வதாக எழுதியிருந்தார். இந்த பிரச்சனை அனைத்துக்கும் தந்தை சங்கரே காரணம் என்று எழுதி வைத்திருந்தார்.

மேலும் தந்தை சங்கர் தொடர்பான அனைத்து விவரங்களும் தனது மடிக்கணினியில் இருப்பதாகவும் அவர் எழுதியிருந்தார். அதே போன்று சிஞ்சனா மற்றும் சிந்துராணி எழுதி வைத்திருந்த கடிதத்தில் தாய் தந்தைக்கு ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இந்த விபரீத முடிவை எடுப்பதாக கூறியிருந்தார்கள். மேலும் தனது கணவர் வீட்டில் கொடுமைப்படுத்தியதால் பெற்றோர் வீட்டில் வந்து நாங்கள் தங்கி இருந்தோம். ஆனால் இங்கும் எங்களுக்கு தொடர்ந்து தொல்லை ஏற்பட்டதால் இந்த முடிவு எடுத்துள்ளோம் என்று அவர்கள் தனித்தனியாக கடிதம் எழுதியிருந்தனர்.

பிறகு மதுசாகர் அறையில் வைத்திருந்த மடிக்கணினி மற்றும் சிந்து ராணி மற்றும் சிஞ்சனா ஆகியோரின் மடிக்கணினி மற்றும் 4 செல்போன்களை காவல்துறையினர் கைப்பற்றினர். இதையடுத்து சங்கரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மகன், மகள்கள், மனைவி என 4 பேர் தற்கொலை சங்கர் தான் காரணம் என்பது மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |