Categories
மாநில செய்திகள்

“தடுப்பூசி போட்டால் வீட்டுமனை பட்டா, தங்கம், வெள்ளி இன்னும் பல”…. இலவசமா தராங்களா… உடனே முந்துங்கள்…!!!

தடுப்பூசி போடுபவர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசாக 1 கிராம் தங்கமும், இரண்டாம் பரிசாக 2000 மதிப்புள்ள வெள்ளி விளக்குகளும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம், பவானி தாலுகாவில் வசிக்கும் பொதுமக்கள் 100% தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக பவானி தாசில்தார் முத்துகிருஷ்ணன் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் 10 பேர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு இரண்டு சென்ட் அளவு உள்ள இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இதனை ஒரு மாத காலத்திற்குள் அமைச்சர் வழங்குவார் என்றும் கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து தடுப்பூசி செலுத்தி கொள்பவர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசாக ஒரு கிராம் தங்கக்காசு 4 பேருக்கும், இரண்டாம் பரிசாக 2000 மதிப்புள்ள வெள்ளி விளக்குகள் 4 பேருக்கும், மூன்றாம் பரிசாக 100 மதிப்புள்ள சேலைகள் 500 மதிப்பில் 10 பேருக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து ஆறுதல் பரிசாக 4 பேருக்கு 400 டீச்சர் கூப்பிடுங்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனால் ஏராளமான பெண்கள் தடுப்பூசி போடுவதற்கு குவிந்துள்ளனர்.

Categories

Tech |