Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“கொரோனா தொற்றை கட்டுப்படுத்த” தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்…. அதிகாரியின் தகவல்….!!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

திருப்பூர்-மேட்டுப்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் தொழிலாளர் உதவி கமிஷனர் அலுவலகத்தில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமை கோவை கூடுதல் தொழிலாளர் ஆணையரான பொன்னுசாமி தொடங்கி வைத்தார்.

இதனையடுத்து சென்னை அப்பல்லோ மருத்துவமனை குழுவினர் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போட்டனர். இவ்வாறு திருப்பூரில் 139 பேர், அவிநாசியில் 65 பேர் என மொத்தம் 204 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் தொழிலாளர் கமிஷனர் ராஜகுமார், அமலாக்கப்பிரிவு கமிஷனர் மலர்கொடி கலந்து கொண்டனர்.

 

Categories

Tech |