சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
பிரித்தானியாவிலுள்ள பிர்மிங்காமில் இருந்து 5 மைல் தூரத்திலுள்ள போர்ன்வில் கிராமத்தில் ரௌஹீத் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவிற்கு ஒரு சிறுமி தனது குடும்பத்தினருடன் விளையாட சென்றுள்ளார். அப்பொழுது அந்த சிறுமியை இளைஞர் ஒருவர் வலுக்கட்டாயமாக காட்டுப்பகுதிக்கு இழுத்து சென்றுள்ளார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் அவரை காணவில்லை என தேடியுள்ளனர். அப்பொழுது அந்த இளைஞர் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்தது தெரியவந்துள்ளது.
உடனே சிறுமியின் பெற்றோர் அருகில் சென்றபோது அந்த இளைஞர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று வெஸ்டமிட்லண்ட்ஸ் போலீசார் சிறுமியை சீரழித்த அந்த 16 வயது இளைஞரை கைது செய்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் நடந்த பூங்காவை சுற்றியுள்ள சி.சி.டிவி கேமராக்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.