Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கை… இதுவரை போடப்பட்ட தடுப்பூசிகள்… பிரபல நாட்டில் முக்கிய தகவல்..!!

அமெரிக்காவில் பொதுமக்களுக்கு இதுவரை 38.3 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவில் பொதுமக்களுக்கு ஜான்சன் & ஜான்சன், பைசர்/பையோஎன்டெக், மாடர்னா உள்ளிட்ட நிறுவனங்களின் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. அதன்படி இதுவரை அமெரிக்காவில் பொதுமக்களுக்கு மொத்தம் 38,30,38,403 கொரோனா தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளதாக அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும் மொத்தம் 38,22,94,795 கொரோனா தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளதாக கடந்த 15-ஆம் தேதி தகவல் வெளியானது. இந்தநிலையில் அமெரிக்க சுகாதாரத்துறை அமெரிக்காவில் இதுவரை முதல் டோஸ் தடுப்பூசியை 21,07,00,361 பேர் போட்டுக் கொண்டதாகவும், இரண்டாவது டோஸ் தடுப்பூசியை 18,00,86,143 பேர் போட்டுக் கொண்டதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.

Categories

Tech |