Categories
உலக செய்திகள்

டிரம்ப் கொண்டு வந்த விசா தொடர்பான மாற்றம்..! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு… வெளியான முக்கிய தகவல்..!!

அமெரிக்காவில் டிரம்ப் ஜனாதிபதியாக இருந்தபோது விசா தொடர்பாக கொண்டு வந்த மாற்றங்களை தற்போது நீதிமன்றம் ரத்து செய்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

அமெரிக்காவில் குடியுரிமை பெறாமல் தங்கி பணிபுரியும் இந்தியா உட்பட பல நாடுகளை சேர்ந்தவர்களுக்கு அந்த நாட்டில் எச்-1பி விசா வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அந்த விசாவுக்கு குலுக்கல் முறையில் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. அதோடு மட்டுமில்லாமல் எச்-1பி விசா சுமார் 65 ஆயிரம் பேருக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது.

அதிலும் குறிப்பாக எச்-1பி விசா வெளிநாட்டிலிருந்து வந்து அமெரிக்காவில் உயர்படிப்பு படித்த 20 ஆயிரம் பேருக்கு வழங்கப்படுகிறது. அதேசமயம் டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த போது அமெரிக்கர்களுக்கே வேலை வாய்ப்பு, அமெரிக்க பொருட்களையே வாங்குவோம் என்று முழக்கமிட்டார். மேலும் எச்-1பி விசாவானது ஊதியத்தின் அடிப்படையில் வழங்கப்படும் என்ற புதிய விதியையும் நடைமுறைக்கு கொண்டு வந்திருந்தார்.

அதன்படி அமெரிக்க விசா அதிக சம்பளம் வாங்குவோருக்கு வழங்கபடும் என்பதால் அமெரிக்காவில் வேலைவாய்ப்பு பெறுவதில் வெளிநாட்டவருக்கு தடை இருந்தது. அதனை எதிர்த்து வழக்கு ஒன்று கலிபோர்னியாவின் வடக்கு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்கில் நீதிபதி ஜெப்ரே ஒயிட், ஜனாதிபதி டிரம்ப் கொண்டு வந்த மாற்றங்களை ரத்து செய்து அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளார்.

Categories

Tech |