Categories
மாநில செய்திகள்

அதிமுக உறுப்பினர் தொடர்ந்த வழக்கு… “ஓபிஎஸ், ஈபிஎஸ் பதவி செல்லும்”… ஐகோர்ட் அதிரடி!!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் நியமனத்தை எதிர்த்த வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.

அதிமுக கட்சி விதிகளின்படி புதிய பதவிகளை உருவாக்குவதற்கு பொது குழுவுக்கு அதிகாரம் கிடையாது. பொதுச் செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் உண்டு. பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவிற்குப்பிறகு தற்காலிக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டார்.  அதன்பின் அதிமுகவின் ஏற்பட்ட பிளவு காரணமாக சசிகலா நீக்கப்பட்டதையடுத்து, ஓ.பன்னீர் செல்வம் ஒருங்கிணைப்பாளர் மற்றும் எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார்கள்.

இது அதிமுக விதிகளுக்கு முரணானது எனவே ஜெயலலிதா இருந்தபோது இருந்த அதிமுக விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும், பொதுச் செயலாளர் பதவியை ரத்து செய்துவிட்டு ஒருங்கிணைப்பாளர் பதவியை ஏற்ற தேர்தல் ஆணையம் உத்தரவை எதிர்த்து அதிமுக உறுப்பினரும், வழக்கறிஞருமான ராம் குமார் ஆதித்யன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்தார்..

இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அங்கீகரிக்கப்பட்ட கட்சியால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் எடுத்த முடிவை தேர்தல் ஆணையம் ஏற்பதில் தவறில்லை. அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கிய தீர்மானத்தை ஏற்ற தேர்தல் ஆணைய உத்தரவு சட்டவிரோதம் இல்லை என்று கூறி அதிமுக உறுப்பினர்  ராம் குமார் ஆதித்யன் தொடர்ந்த வழக்கை முடித்து வைத்தது உயர்நீதிமன்றம்.

Categories

Tech |