Categories
உலக செய்திகள்

வேலைக்கு செல்ல தடை…. பாதிக்கப்படும் பெண்கள்…. தகவல் வெளியிட்ட ஹம்துல்லா நமோனி….!!

மாநகராட்சியில் பணிபுரியும் பெண்களை வேலைக்கு வர வேண்டாம் என்று தலிபான்கள் கூறியுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலில் பெண்கள் பணிக்கு வர வேண்டாம் என்று தலிபான்கள் தடை விதித்துள்ளனர். இதுகுறித்து தலிபான்களின் இடைக்கால அரசின் மேயரான ஹம்துல்லா நமோனி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மாநகராட்சியில் பணிபுரியும் பெண்கள் இனிமேல் வேலைக்கு வரவேண்டாம் அதிலும் பெண்களால் மட்டுமே செய்ய முடியும் பணிகளை செய்வோர் வேலைக்கு வரலாம் என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பள்ளிக்கு செல்ல தலிபான்கள் தடை விதித்துள்ள நிலையில் தற்போது மாநகராட்சி  பணிகளிலும் பெண்கள் வேலை செய்ய தடை விதித்துள்ளனர். இது போன்று பெண்களுக்கு எதிரான பல்வேறு கட்டுப்பாடுகளை தலிபான்கள் விதித்துள்ளது அனைவரிடத்திலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |