ஐலாலாபாத்தில் 2வது நாளாக தொடர்ந்து தலிபான்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஐலாலாபாத் என்ற நகரின் இரு பகுதிகளில் கடந்த சனிக்கிழமை அன்று, தலிபான்களை நோக்கி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்நிலையில், இதே நகரத்தில் இருக்கும் ஒரு பேருந்து நிலையத்தில் நேற்று வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில், இரண்டு நபர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த தாக்குதலில், தலிபான் அமைப்பை சேர்ந்த ஒருவருக்கு காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தலிபான்களின் எல்லை காவல்துறையினரின் வாகனத்தை குறிவைத்து இந்த குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்துள்ளது என்று கூறப்பட்டிருக்கிறது.
மேலும், நேற்று முன்தினம், ஜலாலாபாத் நகரில் வாகன வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டத்தில், தலிபான்கள் இரண்டு பேர் உட்பட மூவர் உயிரிழந்தனர். மேலும், 19 நபர்களுக்கு காயம் ஏற்பட்டது.