11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை கடத்திய குற்றத்திற்காக வாலிபரரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள திருமானூர் பகுதியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி வசித்து வருகிறார். இந்த மாணவியை கடந்த 11-ஆம் தேதியிலிருந்து காணவில்லை. இதனால் அவரது பெற்றோர் அணைத்து இடங்களிலும் தேடி பார்த்த பிறகு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மாணவியை தஞ்சை மாவட்டத்தில் வசிக்கும் ராஜசேகர் என்பர் கடத்தி சென்றது தெரிய வந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் ராஜ் சேகரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மேலும் காவல்துறையினர் அந்த மாணவியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டனர்.