அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பார்டர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அருண் விஜய் தற்போது சினம், அக்னி சிறகுகள், பார்டர், பாக்ஸர், யானை போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் பார்டர் படத்தை குற்றம் 23, ஈரம் போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்த அறிவழகன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஸ்டெபி படேல் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ரெஜினா கெஸன்ட்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார்.
Coming to theaters… November 19th!! 🙏🏽❤#ArunVijayInBorrder#AVinBorrderOnNov19th@dirarivazhagan @ReginaCassandra @StefyPatel
@SamCSmusic @DopRajasekarB@All_In_Pictures @viwinsr@prabhuthilaak @11_11cinema @DoneChannel1 @proyuvraaj @thinkmusicindia pic.twitter.com/MjxjEBLloc— ArunVijay (@arunvijayno1) September 19, 2021
சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதிரடி ஆக்ஷன் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் அருண் விஜய் ராணுவ அதிகாரியாக நடித்துள்ளார். இந்நிலையில் பார்டர் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி வருகிற நவம்பர் 19-ஆம் தேதி தியேட்டர்களில் இந்த படம் வெளியாக உள்ளது.