கேட்டலோனிய மக்கள் தங்கள் கைகளில் கிடைக்கும் குப்பைகளைக் காவல் துறையினர் அமைத்து வைத்திருந்த தடுப்புகளுக்கு வெளியே வீசி, அரசாங்கத்துக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.
ஸ்பெயின் நாட்டில் உள்ள கேட்டலோனியா மாகாணத்தை தனிநாடாக அறிவிக்கக் கோரி அங்குள்ள மக்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். ஆனால் கேட்டலான்களின் இந்தக் கோரிக்கைக்கு ஸ்பெயின் அரசு செவிசாய்க்கவில்லை. இந்நிலையில், 2017ஆம் ஆண்டு கேட்டலோனியாவை தனிநாடாக அறிவிப்பது தொடர்பாக அம்மாகாண அரசு பொது வாக்கெடுப்பு நடத்தியது.
இந்த வாக்கெடுப்பில் 90 சதவிகித கேட்டலோன் மக்கள், தனிநாட்டுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதையடுத்து, 2017 அக்டோபர் 27ஆம் தேதி கேட்டலோனியாவை சுதந்திர நாடாக கேட்டலோனியா நாடாளுமன்றம் அறிவித்தது.அந்த அறிவிப்பைத் தொடர்ந்து, கேட்டலோனியா நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. மேலும், பிரிவினைவாதத்தைத் தூண்டிவிடுவதாகக் கூறி கேட்டலோன் தலைவர்கள் மீது தேச துரோக வழக்கு போடப்பட்டு, அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.