Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகள் வழங்க…. மத்திய அரசிடம் வலியுறுத்தல்…. சுகாதாரத்துறை செயலாளர்….!!!!

தமிழகம் முழுவதிலும் நேற்று மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. அதன்படி சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்று தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன. அது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் இரண்டாவதாக மீண்டும் நடத்தப்பட்ட தடுப்பூசி முகாம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை மொத்தமாக 4.35 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. தற்போது கையிருப்பில் உள்ள தடுப்பூசிகள் எல்லாம் நேற்றுடன் தீர்ந்துவிட்டது.

இந்நிலையில் கூடுதலான தடுப்பூசிகளை வழங்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் இருப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. அதனால் உடனே தடுப்பூசிகள் அதிக அளவு வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளோம் மழைக்காலம் என்பதால் அக்டோபர் வரை கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்றாலும் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |