விக்ரம், துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் மகான் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விக்ரம் தற்போது பொன்னியின் செல்வன், மகான், கோப்ரா ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மகான் படத்தில் விக்ரமின் மகனும், நடிகருமான துருவ் விக்ரமும் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் .
🥁🥁🥁#MahaanFirstSingle, #Soorayaatam from 22.09.2021 🔥🔥🔥
A @Music_Santhosh musical! 🎼#ChiyaanVikram #DhruvVikram @karthiksubbaraj @SonyMusicSouth @proyuvraaj #Mahaan 🔥 pic.twitter.com/bM2BhllVR9
— Seven Screen Studio (@7screenstudio) September 20, 2021
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்திலிருந்து விக்ரம் மற்றும் துருவ் விக்ரமின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் மகான் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி வருகிற செப்டம்பர் 22-ஆம் தேதி இந்த படத்தில் இடம்பெற்ற ‘சூரயாட்டம்’ என்கிற பாடல் வெளியாக உள்ளது.