Categories
கிரிக்கெட் விளையாட்டு

டாஸ் வென்ற பிறகு ….கேப்டன் தோனி சொன்ன விஷயம் இதுதான் ….!!!

14 வது சீசன் ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கியது .இதில் துபாயில் நடந்த முதல் போட்டியில் சென்னை -மும்பை அணிகள் மோதின .இதில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதில் டாஸ் வென்ற பிறகு சென்னை அணி கேப்டன் தோனி கூறியதாவது,” இந்த ஆடுகளம் ரன் குவிப்புக்கு ஏற்றதாக இருக்கும் என கருதுகிறேன் .இந்த சீசன்  மிகவும் புதியதாக உள்ளது. 7 ஆட்டங்கள் நடந்த பிறகு ஒரு பிரேக். இப்போது மீண்டும்  ஆட்டங்கள் தொடங்கியுள்ளது .

ஷார்டர் பார்மெட் கிரிக்கெட் பொருத்தவரை அப்போது நமது செயல்பாடு எப்படி இருந்தது என்பது பொறுத்து தான் வெற்றி , தோல்வி அமையும் .மேலும் அணியில் டுப்ளசிஸ்,பிராவோ ,மொயீன் அலி ஹேசல்வுட் ஆகியோர் வெளிநாட்டு வீரர்களாக விளையாடுகின்றனர்” இவ்வாறு தோனி கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து பொலார்ட் கூறுகையில்,” டாஸ்  குறித்து நாங்கள் எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை .ரோகித் சர்மா நலமாக உள்ளார். விரைவில் அவரை ஆக்ஷனில் பார்க்கலாம் .இந்த போட்டிக்கு மட்டும்தான் நான் கேப்டன். ஹர்திக் பாண்டியா இந்த ஆட்டத்தில் விளையாடவில்லை” இவ்வாறு எல்லாத் கூறியுள்ளார்.

Categories

Tech |