கோடநாடு வழக்கில் 2017ல் இறந்த தினேஷ்குமார் மரணம் தொடர்பாக மீண்டும் காவல் துறையினர் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்..
கோடநாடு வழக்கு சம்பந்தமாக தற்போது மீண்டும் காவல் துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். ஏடிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக அதிரடி விசாரணை நடக்கிறது.. இந்த கொடநாடு வழக்கில் முதல் நபராக சேர்க்கப்பட்டுள்ள சயான் விபத்தில் சிக்கும் போது அவரது மனைவி மற்றும் குழந்தை உயிரிழந்தனர்.. அதற்கு முன்னதாக இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கனகராஜ் சேலத்தில் ஒரு விபத்தில் மரணமடைகிறார்.
மேலும் கோடநாடு பங்களாவில் கணினி ஆபரேட்டராக பணிபுரிந்த தினேஷ்குமார் சம்பவம் நடந்த 4 மாதங்களுக்குப் பிறகு தற்கொலை செய்து கொள்கிறார்.. இது போன்ற 4 மரணங்களை உள்ளடக்கிய வழக்கை தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இதில் கனகராஜ் மனைவி, குழந்தை, கனகராஜ், தினேஷ்குமார் 4 மரணம் தொடர்பாக தனிப்படை போலீசார் சம்பந்தப்பட்டவர்களை விசாரித்து வந்த நிலையில், தற்போது நீதிமன்றத்தின் அனுமதி பெற்று தினேஷ்குமார் மரணம் தொடர்பாக ஏடிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் மீண்டும் காவல் துறையினர் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். இந்த வழக்கு நீலகிரி காவல் நிலையத்தில் தற்கொலை என முடிக்கப்பட்ட நிலையில் காவல்துறை மீண்டும் இந்த வழக்கை விசாரிக்க போகின்றனர்..
முன்னதாக தினேஷ் குமாருக்கு லுங்கி கட்டும் பழக்கம் இல்லை.. லுங்கி அறையில் எப்படி வந்தது?.. அவர் லுங்கியில் மாட்டி தற்கொலை செய்திருப்பதாக கூறுவது சந்தேகமாக இருக்கிறது.. எனவே மீண்டும் தினேஷ் குமாரின் மரணத்தை விசாரிக்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் கோரியிருந்தனர். இந்த நிலையில் கணினி ஆபரேட்டர் மரணம் தொடர்பாக விசாரிக்க தனிப்படை போலீசார் திட்டமிட்டு இருக்கிறார்கள்..