வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சூலக்கரை பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு கார்த்திகா என்ற 8 மாத கர்ப்பிணி மனைவி இருக்கின்றார். இந்நிலையில் கார்த்திகாவிற்கு வளைகாப்பு நடைபெற்ற நிலையில் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து கார்த்திகாவின் பெற்றோர் அவரை அழைத்து சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மணிகண்டன் தற்கொலை செய்து கொள்வதாக தனது சகோதரனிடம் தொலைபேசியில் தெரிவித்துள்ளார். இது குறித்து சகோதரர் சுப்பிரமணியிடம் கூறியுள்ளார். அதன்பிறகு சுப்பிரமணி தோட்டத்தில் இருந்து வீட்டிற்கு சென்று பார்த்த போது மணிகண்டன் வீட்டில் இருக்கும் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சுப்பிரமணியன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.