Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

புரட்டாசி மாதம் வந்துட்டு…. குறைவாக வந்த பொதுமக்கள்…. வியாபாரிகளின் தகவல்….!!

புரட்டாசி மாதம் வந்ததை அடுத்து பொதுமக்கள் மீன்கள் வாங்குவதற்கு ஆர்வம் காட்டவில்லை என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கீழவாசல் பகுதியில் இயங்கி வந்த மீன் மார்க்கெட் கொரோனா தொற்று பரவல் காரணமாக திறக்கப்படவில்லை. இதனால் கொண்டிராஜபாளையம் பகுதி மற்றும்  மாநகரின் பல்வேறு இடங்களில் மீன் கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில் கொண்டிராஜபாளையத்தில் 20-க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகிறது. இங்கு வழக்கம்போல் ஞாயிறு, திங்கள், புதன், வியாழன் போன்ற கிழமைகளில் பொதுமக்கள் அதிகமாக காணப்படுவர். ஆனால் தற்போது புரட்டாசி மாதம் தொடங்கியதால் பொதுமக்களின் கூட்டம் குறைவாக காணப்படுகிறது.

இந்த புரட்டாசி மாதம் முழுவதும் பெருமாளுக்கு உகந்த நாள் என்பதால் பொதுமக்கள் விரதமிருந்து வழிபடுவர். இதனால் பொதுமக்கள் அசைவம் சாப்பிடாமல் தவிர்ப்பதற்கு மீன்கள் வாங்க ஆர்வம் காட்டவில்லை. இதனையடுத்து குறைந்த எண்ணிக்கையில் பொதுமக்கள் கடைகளுக்கு வந்து மீன்களை வாங்கிச் சென்றனர். இவ்வாறு பொதுமக்கள் குறைவாக வந்து சென்றாலும் ஒரு சில கடல் மீன்கள் விலை கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் அதிகமாக இருந்தது. ஆகவே கடல் மீன்கள் குறைவாக வருவதே அதிக விலைக்கு காரணம் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோன்று கோழி, ஆடு போன்ற இறைச்சிகளையும் மக்கள் குறைவாகவே வாங்கிச் சென்றனர்.

Categories

Tech |