நிலத்தின் வழியில் பிணத்தை எடுத்துச் செல்ல அனுமதிக்காததால் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் கிராமத்தில் இருக்கும் அருந்தியர் காலனியில் கோவிந்தராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் உடல் நலக்குறைவால் திடீரென உயிரிழந்துள்ளார். அப்போது அவருடைய உடலை அடக்கம் செய்வதற்காக வழக்கம் போல் பாலாற்றின் வழியை சுடுகாட்டிற்கு உறவியினர்கள் எடுத்து சென்றுள்ளனர். ஆனால் தற்போது கனமழை பெய்ததால் பாலாற்றில் அதிக அளவு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனால் அருகில் இருந்த நிலத்தின் வழியில் உடலை எடுத்துச் செல்வதற்காக கேட்ட போது உரிமையாளர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனையடுத்து பிணத்தை நடுரோட்டில் வைத்து அவரின் உறவியினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இதில் பட்டா நிலத்தின் உரிமையாளரிடம் வருவாய் ஆய்வாளர் சித்ரா தலைமையில் வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அதற்கு பிறகு நிலத்தின் உரிமையாளருக்கு உடன்பாடு ஏற்பட்டதினால் இந்த முறை மட்டும் நிலத்தின் வழியாக இறந்தவரின் உடலை எடுத்துச் செல்ல அனுமதி அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இறந்தவரின் உடலை கொண்டு சென்று அடக்கம் செய்துவிட்டு உறவினர்கள் வீடு திரும்பி சென்றுள்ளனர்.