Categories
உலக செய்திகள்

ஆத்திரமடைந்த பிரான்ஸ்…. நட்பு நாடுகளுடனான உறவு துண்டிப்பு…. வெளியான தகவல்கள்….!!

நட்பு நாடுகளுடனான உறவை பிரான்ஸ் அதிகாரிகள் துண்டித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் அதிகாரிகள் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நட்பு நாடுகளுடனான உறவை துண்டித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் பிரான்ஸ் தங்களது தூதரக அதிகாரிகளையும் திரும்ப அழைத்துள்ளது. இதனையடுத்து அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய மூன்று நாடுகளும் சேர்ந்து ‘ஆக்கஸ்’ என்ற புதிய அமைப்பை உருவாக்கியுள்ளனர். மேலும் இந்தோ-பசிபிக் முத்தரப்பு ஒப்பந்தத்தையும் செய்துள்ளனர். அதாவது நீர்மூழ்கி கப்பலை தயாரிக்க ஆஸ்திரேலியாவுக்கு பல தொழில்நுட்பங்கள் தேவைப்படுகிறது. அதனால் அமெரிக்கா இந்தோ-பசிபிக் முத்தரப்பு ஒப்பந்தத்தின் படி அவர்களுக்கு தொழில்நுட்பங்களை வழங்க முடிவு செய்துள்ளது. இதன்காரணமாக ஆஸ்திரேலியா இதற்கு முன்னதாக பிரான்ஸிடம் போட்டிருந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது. இதனால் பிரான்ஸ் நாட்டு அதிகாரிகள் கடும் கோபத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இதற்கிடையில் அமெரிக்காவுக்கும் பிரான்சுக்கும் இடையே பல வருடகாலமாக நெருங்கிய உறவு இருந்துள்ளது. இந்நிலையில் இந்த நீர்முழ்கி கப்பல் விவகாரம் குறித்து பிரான்ஸ் நாட்டின் அதிபரான இமானுவேல் மெக்ரன் கூறியதாவது “ஆஸ்திரேலியா எங்களுடன் போட்டிருந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ததற்கு அமெரிக்கா காரணமாக இருப்பதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை” என கூறியுள்ளார். மேலும் பிரான்ஸ் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீன் யெவ்ஸ் லே டிரியன் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியதாவது “ஆஸ்திரேலியா எங்களுடனான வர்த்தக உறவை முறித்து எங்களின் நட்பு நாடான அமெரிக்காவுடன் ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு இரு நாடுகளும் இணைந்து எடுத்துள்ள இந்த முடிவு ஏற்றுக்கொள்ளும்படி அமையவில்லை. இதனால் இந்த இரு நாடுகளுக்கான தூதரக அதிகாரிகளையும் திரும்ப அழைக்க வேண்டிய கட்டாயம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது” என கூறியுள்ளார்.

அதாவது பிரான்ஸ் நாட்டின் இந்த திடீர் முடிவால் அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும் அதிர்ச்சி அடைந்துள்ளது. இதனைத்தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செய்தி தொடர்பாளர் எமிலி ஹார்ன் கூறியதாவது “பிரான்ஸ் தூதரக அதிகாரிகளை திரும்ப அழைத்தது குறித்து அமெரிக்கா அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது. மேலும் இரு நாடுகளுக்கும் இடையேயான பிரச்சனையை தீர்த்து வைக்கும் முயற்சியையும் மேற்கொள்வோம்” என கூறியுள்ளார். அடுத்ததாக இந்த நீர்மூழ்கி கப்பல் விவகாரம் குறித்து ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சகம் கூறியதாவது “எங்களுடைய முடிவு பிரான்ஸுக்கு எவ்வளவு பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை நாங்கள் புரிந்து கொள்கிறோம். இதற்கிடையில் அமெரிக்காவுடன் நாங்கள் செய்து கொண்ட ஒப்பந்தம் எங்களின் தேசிய பாதுகாப்பு நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவு ஆகும்” என அறிவித்துள்ளது.

Categories

Tech |