லால்பாக் எக்ஸ்பிரஸ் ரயிலில் ரேஷன் அரிசி கடத்தி சென்றதை காவல்துறையினர் கண்டுபிடித்து அதை பறிமுதல் செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை பகுதியில் இருக்கும் ரயில் நிலையத்தில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் லால்பாக் எக்ஸ்பிரஸ் ரயில் இரண்டாவது பிளாட்பாரத்தில் வந்து நின்றுள்ளது.
இதனையடுத்து ரயிலின் உள்ளே காவல்துறையினர் சோதனைச் செய்ததில் முண்ணூறு கிலோ ரேஷன் அரிசி இருந்ததைக் கண்டுபிடித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அரிசிகளை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.