Categories
உலக செய்திகள்

இளவரசர் மீது குற்றம் சாட்டிய பெண்…. பாதிக்கப்படும் அரச குடும்பம்…. பிரித்தானியா நீதிமன்றம் தலையீடு….!!

இளவரசர் ஆண்ட்ரூ மீது தொடுக்கப்பட்ட பாலியல் வழக்கானது பிரித்தானியா நீதிமன்றத்தின் கண்பார்வைக்கு வந்துள்ளது.

பிரித்தானியாவின் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஆண்ட்ரூ மீது கடந்த 2001 ஆம் ஆண்டு  வர்ஜீனியா கியூஃப்ரே என்னும் பெண் அமெரிக்காவில் வழக்கு ஒன்றை தொடுத்தார். அதில் இளவரசர் ஆண்ட்ரூ தன்னை கட்டாய பாலியல் வன்புணர்ச்சி செய்தார் என்று அவர் மீது குற்றம் சாட்டியுள்ளார். இந்த வழக்கை இவ்வளவு வருடங்களாக பொருட்படுத்தாமலும் உரிய பதில் அளிக்காமலும் இளவரசர் ஆண்ட்ரூ அலட்சியப்படுத்தி வந்தார். தற்போது இந்த வழக்கானது  பிரித்தானியா நீதிமன்றத்தின் கண்பார்வைக்கு சென்றுள்ளது. இதனால் இளவரசர் ஆண்ட்ரூக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இது மட்டுமின்றி இந்த வழக்கில் பல மில்லியன் பவுண்டுகள் செலவிடும் சூழல் உருவாகியுள்ளதை இளவரசர் ஆண்ட்ரூ விரும்பவில்லை. மேலும் அவரின் வழக்கறிஞர்கள் குழு மீது நம்பிக்கை இல்லை என்று ஆண்ட்ரூ கூறியுள்ளார். குறிப்பாக இந்த வழக்கில் வசமாக சிக்கிக் கொண்டதை அறிந்த இளவரசர் ஆண்ட்ரூ இதனால் தமது மரியாதைக்கு இழுக்கு வந்து விடும் என்று பயப்படுகிறார். அதிலும்  இந்த விவகாரத்தில் அவரது குடும்பத்தினரும் நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.

இளவரசர் ஆண்ட்ரூ பொதுவாழ்க்கையில் இருந்து விலகல்... பாலியல் குற்றச்சாட்டால்  பதவி விலகுவதாக அறிவிப்பு!

இதனையடுத்து இந்த விவகாரத்தில் அவருக்கு உதவ எவரும் முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக பொதுமக்களுக்கு இளவரசர் ஆண்ட்ரூ விளக்கம் அளிக்காமல் மறுத்து வருகிறார். இது அரசு குடும்ப மரியாதை மற்றும் கௌரவத்திற்கு ஊறு விளைவிக்கும் என்று கூறப்படுகிறது. ஆதலால் இந்த வழக்கின் காரணமாகவே கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்தே இளவரசர் ஆண்ட்ரூ முக்கிய அரச குடும்பப் பொறுப்புகளிலிருந்து விலகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |