Categories
உலக செய்திகள்

சிக்னலில் நின்ற கார்…. வேகமாக வந்த ட்ரக்…. ஒரு குடும்பமே பலியான சோகம்….!!

சிக்னலில் நின்ற காரின் மீது ட்ரக் ஓன்று மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவின் கியூபெக்கிலுள்ள monteregie பகுதியில் குறுக்கு சாலை ஒன்றுள்ளது. இங்கு சிக்னலுக்காக கார் ஒன்று காத்திருந்தது. அந்த காரை 42 வயதுள்ள பெண்மணி ஓட்டி வந்துள்ளார்.  மேலும் அவருடன் 15 வயது மகன் மற்றும் 13 வயது மகளும் இருந்துள்ளனர். அப்போது வேகமாக வந்த ட்ரக் ஒன்று காரின் மீது மோதியுள்ளது. இதில் கார் பலத்த சேதமடைந்துள்ளது. இந்த விபத்து குறித்து தகவலறிந்ததும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காருக்குள் இருந்த மூவரையும் மருத்துவமணைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு அவர்ளை பரிசோதித்த மருத்துவர் மூவரும் இறந்துள்ளதாக கூறியுள்ளார். இதுகுறித்து விசாரணை செய்த போலீசார் ட்ரக் ஒட்டிய நபருக்கு 65 வயது என்றும் அவர் மதுவும்  அருந்தவில்லை எனவும் கூறியுள்ளனர். மேலும் ட்ரக் டிரைவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு அவரின் உடல்நிலை சற்று சீரான பின்னரே எதையும் விசாரிக்க முடியும் என போலீசார் கூறியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |