பெண்ணை மிரட்டிய கஞ்சா வியாபாரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பணகுடி பகுதியில் புருஷோத்தமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன் என்ற மகன் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள வாலிபர்களுக்கு கஞ்சா பொட்டலங்கள் கொடுத்து வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் மணிகண்டனிடம் தெற்கு வள்ளியூர் அம்மன் கோவில் பகுதியில் வசிக்கும் விஜயன் என்பவரின் மனைவியான மஞ்சுளா என்பவர் ஏன் சிறுவர்களுக்கு கஞ்சா பொட்டலங்களை கொடுத்து கெடுக்கிறாய் என்று கேட்டுள்ளார்.
இதில் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் மஞ்சுளாவை தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து மஞ்சுளா பணகுடி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மணிகண்டனை கைது செய்து அவரை பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.