Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மேய்ந்து கொண்டிருந்த ஆடுகள்…. வாலிபர்கள் செய்த செயல்…. போலீஸ் நடவடிக்கை….!!

ஆடுகளை திருடிச் சென்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பத்தன்மேடை பகுதியில் மகாராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான 5 ஆடுகளை அவரது உறவினரான சந்தனமாரி என்பவரிடம் கொடுத்து வளர்த்து வருகிறார். இந்நிலையில் சந்தனமாரி தாம்போதி பாலம் பகுதியில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு 2 மோட்டார் சைக்கிளில் வந்த வீரவநல்லூர் பகுதியில் வசிக்கும் முருகேசன் மற்றும் முத்து உள்ளிட்ட 4 பேர் அங்கு மேய்ந்து கொண்டிருந்த 3 ஆடுகளை திருடி சென்றுள்ளனர்.

இதுகுறித்து சந்தனமாரி முக்கூடல் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முருகேசன் மற்றும் முத்து ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து ஆடுகள் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மற்ற 2 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |