Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“அவங்க மீது நடவடிக்கை எடுக்கணும்” தீக்குளிக்க முயன்ற தொழிலாளி…. போலீஸ் விசாரணை….!!

காவல் நிலையம் முன்பு தொழிலாளி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள விக்கிரமசிங்கபுரம் பகுதியில் நாராயண பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லோகநாதன் என்ற மகன் உள்ளார். இவர் நூற்பாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய தங்கை அடையகருங்குளம் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார். இதற்கு அவருடைய உறவினரான தி.மு.க.வைச் சேர்ந்த வக்கீல் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்து லோகநாதனின் தங்கையை மிரட்டியுள்ளார். இந்நிலையில் லோகநாதன் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தையுடன் விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

அங்கு லோகநாதன் தன்னுடைய தங்கையை மிரட்டிய வக்கீலுக்கு உடந்தையாக காவல்துறையினர் செயல்படுகின்றனர். எனவே வக்கீல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திடீரென லோகநாதன் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். இதனைப் பார்த்த பணியில் இருந்த காவல்துறையினர் லோகநாதனிடம் இருந்த மண்ணெண்ணெய் கேனை பறித்து அவர் மீது தண்ணீர் ஊற்றி காப்பாற்றினர். அதன் பின் காவல்துறையினர் லோகநாதனிடம் விசாரணை நடத்தினர்.

Categories

Tech |