கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பின்னவாசல் பகுதியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியபோது கொரோனா தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதன்பின் தமிழகம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அதன்படி இதுவரை முதற்கட்டமாக 5 லட்சத்து 17 ஆயிரத்து 950 நபர்களுக்கும், 2-ம் கட்ட கொரோனா தடுப்பூசியாக 1 லட்சத்து 11 ஆயிரத்து 179 நபர்களுக்கு மொத்தம் 6 லட்சத்து 29 ஆயிரத்து 129 நபர்களுக்கு செலுத்தப்பட்டதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த முகாம் மூலமாக 29 ஆயிரத்து 800 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதை இலக்காக நிர்ணயித்து 319 இடங்களில் மாபெரும் 2-ம் கட்ட சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது என்று கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அப்போது உதவி கலெக்டர் பாலச்சந்திரன், அரசு அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் பலர் அவருடன் இருந்தனர்