கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு இடத்தில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கே சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்த நபரை காவல்துறையினர் பிடித்து விசாரணை செய்துள்ளனர்.
அந்த விசாரணையில் அவர் கோகுல் என்பதும், அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து கோகுலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.