தீபாவளி அன்று கீழ்கண்ட முக்கிய விஷயங்களை செய்வதன் மூலம் வாழ்நாள் முழுவதும் நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியும்.
தீபாவளி அன்று புதிய துடப்பத்தால் வீட்டை பெருக்கி சுத்தம் செய்வது மிகுந்த நன்மை தரும். வீட்டில் உள்ள வறுமைகளை நீக்கும். கொட்டைப்பாக்கு ஒன்றில் சிறப்பு நூலால் கட்டி லட்சுமி தேவியின் படத்தில் மாலையாகப் போட்டு பின் பணம் இருக்கும் இடத்தில் வைத்தால் பணம் பெருக வழிவகுக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்கள் கண்டிப்பாக இந்நாளில் தொழில் செய்யும் இடத்திற்கு பூஜைகள் செய்து வழிபட வேண்டும்.
தீபாவளியன்று அனுமனை வழிபடுவது சிறப்பு அனுமனுக்கு ஒரு மண் அகல் விளக்கில் எண்ணெய் ஊற்றி அதில் ஒரு கிராம்பு போட்டு வழிபடுவது நன்மை தரும். தீபாவளி அன்று பூஜை அறையில் மஞ்சள் கட்டி வைத்து பூஜித்து பின் அவற்றை பணப் பெட்டியில் வைக்க செல்வச் செழிப்புடன் வாழலாம். தீபாவளி அன்று இரவு அரசமரத்தடியில் விளக்கேற்றி வைத்து பின்பு திரும்பி பார்க்காமல் வீடு வந்து சேரவும் இவ்வாறு செய்வதன் மூலம் வாழ்க்கையை நல்ல வளமுடனும் செல்வ செழிப்புடன் வாழ வழிவகுக்கும்.