Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“அவங்க மீது நடவடிக்கை எடுக்கணும்” திருநங்கை தீக்குளிக்க முயற்சி…. தடுத்து நிறுத்திய அதிகாரிகள்….!!

கலெக்டர் அலுவலகத்தின் முன்பு திருநங்கை தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மேலப்பாளையம் கணேச புரம் பகுதியில் திருநங்கையான கார்த்திக் என்ற சுவேதா என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து பாளையங்கோட்டை காவல் துறையினர் மீது நான் புகார் கொடுத்தேன். அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே திருநங்கையான கார்த்திக் என்ற சுவேதா விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என விஷ பாட்டிலை கையில் எடுத்தார். இதனைப் பார்த்த காவல்துறையினர் திருநங்கையான கார்த்திக் என்ற சுவேதாவிடம் இருந்த விஷ பாட்டிலை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து காவல்துறையினர் அவர் பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த லைட்டரையும் பறிமுதல் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து திருநங்கையான கார்த்திக் என்ற சுவேதாவை காவல்துறையினர் மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகளிடம் அழைத்துச் சென்று அவரது குறைகளை கூற வைத்தனர். அதன்பிறகு கார்த்திக் என்ற சுவேதாவை காவல்துறையினர் வெளியில் அழைத்து வந்து போக வலியுறுத்தியுள்ளனர். அப்போது திடீரென தனது கார்த்திக் என்ற சுவேதா தனது மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த மண்ணெண்ணெயை எடுத்து தன் உடல் மீது ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வதாக கூறினார். இதனையடுத்து காவல்துறையினர் கார்த்திக் என்ற சுவேதாவின் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர். அதன் பின் காவல்துறையினர் கார்த்திக் என்ற சுவேதாவிடம் எச்சரிக்கை செய்த பின் அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

Categories

Tech |