Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரொம்ப நேரமாகியும் வரல…. பொதுமக்களின் சாலை மறியல்…. போலீஸ் பேச்சுவார்த்தை….!!

நீண்ட நேரமாகியும் மின்சாரம் வராததால் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள புளியந்தோப்பு குமாரசாமி ராஜபுரம் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அப்போது நீண்ட நேரமாகியும் மின்சாரம் வராததால் பொதுமக்கள் வீடுகளில் தூங்க முடியாமல் மிகவும் சிரமம் அடைந்தனர். இதனால் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இவர்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் எழும்பூர் பகுதி செயலாளர் முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வடசென்னை மேற்கு மாவட்ட செயலாளர் செல்வம் மற்றும் நிர்வாகிகள் பொதுமக்களுடன் இணைந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.  இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். அதன்பின் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Categories

Tech |