Categories
தேசிய செய்திகள்

இவர்களுக்கெல்லாம் பேருந்து பயணத்துக்கு அனுமதி இல்லை… அரசு அதிரடி அறிவிப்பு… பயணிகள் அதிர்ச்சி…!!!

குஜராத் மாநிலத்தில் தடுப்பூசி போடாதவர்களுக்கு பொது  இடங்களில் அனுமதி        மறுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது   

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி போடாதவர்கள் பொது போக்குவரத்து மற்றும் பொது இடங்களில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என மாநகராட்சி அறிவித்துள்ளது. தடுப்பூசி போட்டவர்கள் அதற்கான சான்றிதழை எப்போதும் கையில் வைத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு சான்றிதல் இல்லாதவர்கள் பேருந்துகள், நூலகங்கள், உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள், ஆற்றங்கரை போன்ற பொது இடங்களில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என மாநகராட்சி அறிவித்துள்ளது.

முதல் தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் இரண்டாவது தவணை தடுப்பூசிகள் காத்திருந்தாலும் அவர்களும் போக்குவரத்து சேவை, ஏரிக்கரை மற்றும் ஆன்மீக ஸ்தலங்களில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அரசு பூங்காக்களின் இயக்குனர் திரு .ஜிக்ணேஷ் பட்டேல் கூறியுள்ளார். மாநகராட்சியின் இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

Categories

Tech |