Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அத்துமீறிய அதிகாரி…. அதிர்ச்சியடைந்த பெண் ஊழியர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

பெண் ஊழியர்களை போட்டோ எடுத்து டுவிட்டரில் பதிவு செய்த வருவாய் ஆய்வாளரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தின் 5-வது தளத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் சிவகிரி கொல்லாங்கோவில் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் சீனியர் வருவாய் ஆய்வாளராக கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் வேலை பார்த்து வருகிறார். இவர் அலுவலகத்தில் தன்னுடன் பணிபுரியும் பெண் ஊழியர்கள் மற்றும் அங்கு வரக் கூடிய பெண்களை அவர்களுக்குத் தெரியாமல் செல்போனில் படம் பிடித்து அதை டுவிட்டரில் பதிவேற்றியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் ஊழியர்கள் தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர்.

இதில் பாதிக்கப்பட்ட ஒரு பெண் ஊழியரின் பெற்றோர் இதுகுறித்து சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி காவல்துறையினர் சதீஷ்குமாரின் டுவிட்டரை ஆய்வு செய்தபோது ஊழியர்களின் படம் பதிவேற்றி இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் சதீஷ்குமார் மீது தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துவது, பெண்களை இழிவுபடுத்தும் வகையில் செயல்படுதல் போன்ற 2 பிரிவுகளின் கீழ்  வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதனைத்தொடர்ந்து சதீஷ்குமார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கிளை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். இதுகுறித்து சைபர் கிரைம் காவல்துறையினர் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி துறை ரீதியான நடவடிக்கையாக சதிஷ்குமாரை சஸ்பெண்டு செய்து மாவட்ட வருவாய் அதிகாரி முருகேசன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Categories

Tech |