Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திருச்செந்தூர் அருகே…. குரும்பூர் கூட்டுறவு வங்கியில் ரூ.3 கோடிக்கு மேல் மோசடி…

கூட்டுறவு வங்கியில் 3 கோடிக்கு நகை கடன் மோசடி நடந்தது அம்பலமாகியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே குரும்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நகை கடனில் மோசடி நடந்தது அம்பலமாகியுள்ளது. தமிழக அரசின் நகை கடன் தள்ளுபடி குறித்த ஆய்வின் போது 3 கோடிக்கும் மேல் மோசடி நடந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதாவது, நகை அடமானம் வைக்கப்பட்ட 548 பைகளில் 261 அடமான பைகள் மாயமாகியுள்ளது.

3 கோடி நகை கடன் மோசடி தொடர்பாக கூட்டுறவு சங்க தலைவர் முருகேசபாண்டியன் பணிநீக்கம் செய்யப்பட்டார். மேலும் செயலாளர் தேவராஜ், துணைச்செயலாளர் ஜான்சி சந்திரகாந்தா ஞானபாய் உட்பட 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மோசடி தொடர்பாக கூட்டுறவு சங்கங்களின் சார்பதிவாளர் மற்றும் துணை பதிவாளர் அடங்கிய குழு விசாரணை நடத்தி வருகிறது.

Categories

Tech |