சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்த குற்றத்திற்காக பெண் உள்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அருதங்குடி பகுதியில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக கண்ணன் என்பவர் தனது வீட்டின் குளியலறையில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து இருந்திருக்கிறார். இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி கண்ணனின் வீட்டுக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் குளியலறையில் இருந்த 912 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மது பாட்டில்களை பதுக்கி வைத்த குற்றத்திற்காக பாலமுருகன், அரியபிள்ளை மற்றும் கண்ணன் மனைவி கமலா ஆகிய 3 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.