கொரோனா தடுப்பூசியான கோவாக்சினுக்கு சர்வதேச அங்கீகாரம் அளிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்த உலக சுகாதார அமைப்பு முடிவு செய்துள்ளது.
ஹைதராபாத்தில் பாரத் பயோடெக் என்னும் நிறுவனம் அமைந்துள்ளது. அந்த நிறுவனம் தான் கோவாக்சின் தடுப்பூசியை தயாரித்துள்ளது. மேலும் அது தடுப்பூசி தொடர்பான ஒட்டுமொத்த செய்திகளையும் உலக சுகாதார அமைப்புக்கு அனுப்பியுள்ளது. அதாவது கோவாக்சின் தடுப்பூசி குறித்த அனைத்து செய்திகளையும் அனுப்பியுள்ளது. அது என்னவென்றால் தடுப்பூசியின் பாதுகாப்பு அம்சங்கள், செயல்திறன் மற்றும் மூன்று கட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகள் குறித்த தகவல்களாகும். இவ்வாறு கிடைத்த தகவல்களை உலக சுகாதார அமைப்பு தற்போது ஆய்வு செய்து வருகின்றது. இதனைத்தொடர்ந்து நிபுணர்கள் குழு அந்த தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் கோவாக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளிப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் வருகின்ற அக்டோபர் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து அந்த ஆலோசனை கூட்டத்தில் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் தடுப்பூசியின் சிறப்பு அம்சங்கள் குறித்து விளக்குமளிக்கும் என கூறப்படுகிறது. இதனை உலக சுகாதார அமைப்பின் நிபுணர்கள் குழு விரிவாக ஆய்வு செய்யும். இதற்கிடையில் நிபுணர்கள் குழுவின் உறுப்பினர் ஹன்னா லோகினட் கோவாக்சின் தடுப்பூசி தொடர்பாக சிபாரிசு செய்துள்ளார். அதன்படி ஆலோசனை நடத்தப்படும். பின்பு ஆலோசனை கூட்டத்தின் இறுதியில் நிபுணர்கள் குழு தனது சிபாரிசுகளை வழங்கும். இதன் அடிப்படையில் தான் கோவாக்சின் தடுப்பூசியை அங்கீகரிப்பது தொடர்பான முடிவை எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.