மின்னல் தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் 2 பேர் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள நெருஞ்சிப்பட்டி பகுதியில் நாகசெல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். தொழிலாளியான இவருக்கு கற்பகவள்ளி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இவரும் அதே பகுதியை சேர்ந்த முத்துலட்சுமி, அருணா ஆகிய 3 பேரும் அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்துள்ள நிலையில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது. அப்போது கற்பகவள்ளி, அருணா, முத்துலட்சுமி மீது மின்னல் தாக்கியுள்ளது.
இதில் 3 பெரும் பலத்தகாயம் அடைந்துள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் 3 பேரையும் கமுதி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே கற்பகவள்ளி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனைதொடர்ந்து முத்துலட்சுமி மற்றும் அருணாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதுகுறித்து தகவலறிந்து சென்ற கோவிலாங்குளம் கிராம நிர்வாக அலுவலர் சரவணகுமார் மற்றும் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.