பெண் ஒருவரை கொலை செய்த கள்ளக்காதலன் உள்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்திலுள்ள குப்பங்குளத்தில் ரவுடி கிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி காந்திமதி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளனர். இந்நிலையில் குற்ற வழக்கு காரணத்தினால் கிருஷ்ணன் என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். அதன்பின் அவரின் மனைவியை சாலையில் வைத்து மூன்று பேர் சேர்ந்த மர்ம கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர்.
இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்திய போது கள்ளக்காதல் காரணத்தினால் காந்திமதியை கள்ளக்காதலன் உட்பட 4 பேர் சேர்ந்து வெட்டி கொலை செய்தது தெரியவந்துள்ளது. அதற்கு பிறகு அவர்கள் 4 பேரையும் காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தியதில் வீரமணி மற்றும் 16,17,19 வயதுடையை 3 சிறுவர்கள் என தெரியவந்துள்ளது. இதனை அடுத்து கணவன் இறந்ததால் காந்திமதி வீரமணி என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.
இந்த காரணத்தால் அடிக்கடி வீரமணி காந்திமதியின் வீட்டுக்கு வந்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். இதனைப் பார்த்து காந்திமதியின் உறவினர்கள் அவரை கண்டித்துள்ளனர். இதனால் தனது வீட்டிற்கு வர வேண்டாம் என வீரமணியிடம் அவர் கூறியுள்ளார். இதன் காரணத்தால் கோபமடைந்த வீரமணி கடைக்கு சென்று விட்டு வந்த காந்திமதியை தனது நண்பர்களுடன் சேர்ந்து சரமாரியாக வெட்டிக்கொலை செய்துள்ளார். இதனை தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் காவல்துறையினர் கைது கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வீரமணியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.