செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஐ.பெரியசாமி, ” கடந்த அதிமுக ஆட்சியில் கூட்டுறவு சங்கங்களில் பல்வேறு மோசடிகள் நடைபெற்றுள்ளது. நிலத்தினுடைய அளவிற்கு மீறியும் கடன் வழங்கப்பட்டுள்ளது. ஒரு ஏக்கர் இருக்கிறது என்றால் அதில் ஏக்கருக்கு 25,000 கொடுக்க வேண்டுமென்றால் அதற்கு இரண்டு லட்சம் கொடுத்து இருக்கிறார்கள். தங்க நகை அடகு வைக்காமல் போலி நகைகளை அடகு வைத்து கடன் பெற்றிருக்கிறார்கள்.
ஒரே ஆதார் எண், ஒரு குடும்ப அட்டை வைத்து ஒரே நபர் பல வங்கிகளில் 600க்கும் மேலாக கடன் வாங்கியுள்ளார்கள். அது எப்படி வாங்கினார்கள்? என்று தெரியவில்லை. இவ்வாறு நடக்கும் முறைகேடுகளை தடுக்க அனைத்து கூட்டுறவு சங்கங்களையும் விரைவில் மத்திய கூட்டுறவு சங்கங்கள் இணைக்கப்படும். கூட்டுறவு துறையில் காலியாக உள்ள காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று உறுதியளித்துள்ளார்.