Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

பல்வேறு நடவடிக்கைகள்…. நடைபெற்ற ஆய்வு கூட்டம்…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!

மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தலைமையில் தேர்தல் அலுவலர்கள் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள உள்ளாட்சித் தேர்தல் பணியில் ஈடுபடும் தேர்தல் அலுவலர்கள், மண்டல அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது, மண்டல அலுவலர்கள் வாக்கு சாவடிகளை ஆய்வு செய்து குடிநீர் வசதி, மின் வசதி மற்றும் கழிவறை வசதிகள் உள்பட அடிப்படை வசதிகளில் குறைபாடுகள் இருப்பின் அதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் வாக்கு பதிவு மையத்திற்கு தேவையான பொருள்கள் வந்தடைந்ததை உறுதி செய்ய வேண்டும் எனவும் கூறினார்.

இதனையடுத்து வாக்குப்பதிவு அலுவலர்கள் வாக்குபதிவுக்கு முந்தையநாள் வாக்குச்சாவடிக்கு வருகை தரவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். அதன்பின் வாக்குபதிவு அன்று அலுவலர்கள் அனைவரும் காலை 6 மணிக்கு பணியில் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து வாக்குப்பதிவு நடைபெறுகின்ற அன்று தேர்தல் பொருட்கள் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும், வாக்கு பெட்டிகள் காலியாக இருப்பது அனைவருக்கும் காண்பித்து உறுதி செய்ய வேண்டும் எனவும் கூறினார். இதனைத் தொடர்ந்து வாக்குப் பெட்டி தயார் செய்ததற்கான அனைத்து சீட்டுக்களையும் சரிபார்க்க வேண்டும் எனவும், வாக்குச் சாவடிகளில் ஆண், பெண் என தனித்தனி வரிசையில் நிற்க வைக்க வேண்டும் எனவும், 3-ஆம் பாலினத்தவர்கள் அவர்கள் விரும்பும் வரிசையில் நிற்க அனுமதிக்க வேண்டும் எனவும் கூறினார்.

அதன்பின் வாக்கு பதிவு மையத்தில் கைப்பேசியில் புகைப்படம் எடுக்க அனுமதி அளிக்க கூடாது எனவும், ஒரே நேரத்தில் 3 அல்லது 4 வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் எனவும் கூறினார். மேலும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி வாக்காளர்களுடன் 18 வயது நிரம்பிய துணை நபர் ஒருவரை அனுமதிக்கலாம் எனவும், அனைத்து மையங்களிலும் அரசு அறிவித்துள்ள வழிமுறைகளை அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும், முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் மற்றும் கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும் எனவும் கூறினார். மேலும் வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு முடிந்தவுடன் வாக்கு பெட்டிகள் மூடி முத்திரையிடப்பட்டுள்ளதா என்பதை சரி பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். இந்த கூட்டரங்கில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி, நேர்முக உதவியாளர் ஸ்டீபன் ஜெயச்சந்திரா மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Categories

Tech |