Categories
மாநில செய்திகள்

அடடா…! அடுத்தடுத்து…. முதல்வர் செய்த அதிரடியான செயல்…. பாராட்டும் மக்கள்…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும்  மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு ரூபாய் 4 ஆயிரம் நிதி உதவி அறிவிக்கப்பட்டது. பேருந்துகளில் மகளிருக்கு இலவசமாக பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை முதல்வர் மு.க ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அதுமட்டுமல்லாமல் கொரோனா பேரிடரை தடுப்பதற்கு பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்தவகையில் சென்னையில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தமிழகம் முழுவதும் கடந்த 12ஆம் தேதி மகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இதில் ஒரே நாளில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 28.91 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தமிழகம் முழுவதும் நேற்று இருபதாயிரம் முகாம்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற தடுப்பூசி முகாமிற்கு சென்ற முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அங்கு ஆய்வு மேற்கொண்டார். தடுப்பூசிகள் செலுத்த வரிசையில் காத்திருந்த பொதுமக்களிடம் அங்கு உள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார். இவ்வாறு முதல்வர் பல அதிரடியான செயல்களில் ஈடுபட்டு வருவதால் மக்களிடையே நல்ல பாராட்டுகளை பெற்றுள்ளார்.

Categories

Tech |