Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021 : பந்துவீச்சில் மாஸ் காட்டிய கொல்கத்தா …. 92 ரன்னில் சுருண்டது பெங்களூர் ….!!!

கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூர் அணி 92 ரன்னில் சுருண்டது .

14-வது சீசன் ஐபிஎல் தொடர் இந்தியாவில் கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது .ஆனால் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. இதில் 29 லீக் போட்டிகள் முடிந்த நிலையில் ,மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகின்றன .இதில் இன்று நடைபெறும் 31-வது லீக் ஆட்டத்தில்  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன .இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி பெங்களூர்  அணியில் தொடக்க வீரர்களாக கேப்டன் விராட் கோலி – தேவ்தத் படிக்கல் ஜோடி களமிறங்கினர்.இதில் விராட் கோலி 5 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.

அடுத்து களமிறங்கிய ஸ்ரீகர் பரத் , தேவ்தத் படிக்கல் உடன் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் .ஆனால் பரத் 16 ரன்னில் ஆட்டமிழக்க ,அடுத்ததாக படிக்கல் 22 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின் களமிறங்கிய அதிரடி ஆட்டக்காரர் டிவில்லியர்ஸ் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளிக்க, மேக்ஸ்வெல் 10 ரன்னில் ஆட்டமிழந்தார் .இதனால் 11.4 ஓவரிலேயே 63 ரன்னுக்குள் ஆர்சிபி அணி முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.இதன்பின் களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்னில் வெளியேற  இறுதியாக ஆர்சிபி அணி 19 ஓவரில் முடிவில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 92 ரன்னில் சுருண்டது .இதில் கொல்கத்தா அணி தரப்பில் வருண் சக்கரவர்த்தி , அந்த்ரே ரஸல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

 

Categories

Tech |