Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

இந்த ராசிக்காரர்…. “பணவரவு அதிகம்… உங்கள் ராசி பற்றி அறிய..!!

நாளுக்குள் கடவுள் நம்பிக்கையுடன் இணைந்து ராசி பலன்களும் மக்கள் என்ன ஓட்டத்தில் பிரதி பலிக்கின்றது . நம்முடைய வீட்டிலும் , குடும்பத்தில் எந்த செயலை தொடங்கினாலும் நல்ல நேரம்,  ராசி என்னவெண்று தெரிந்து கொள்ள தினம் தினம் நாள்கட்டியில் கண்டு கழிக்கும் பழக்கம் பலருக்கும் இருந்து வருகின்றது. இந்த நிலையில் மேஷ ராசி முதல் மீனம் ராசி வரை உள்ள 12 ராசிகளின் ராசிபலனை தெரிந்து கொள்ளலாம்.

மேஷம் : 

அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க கூடிய மேஷ ராசி அன்பர்களே…!! இன்று தூரதேச பயணங்களால் ஏற்பட்ட தொல்லை விலகிச்செல்லும். வெளிவட்டார பழக்கவழக்கங்கள் விரிவடையும். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சுருங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும். இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்கு இடையே சுமூக உறவு இருக்க விட்டு கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகள் கல்வியில் அக்கறை காட்டுவீர்கள். மனத்துணிவு இன்று அதிகரிக்கும். பணவரவு எதிர்பார்த்தபடி திருப்திகரமாக இருக்கும். காரிய வெற்றிக்கு தேவையான உதவிகளும் கிடைக்கும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.

இன்று மனம் அமைதியாகவே காணப்படும். இன்று மாணவர்கள் கல்வியில்  முன்னேற்றம் அடைய கொஞ்சம் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பாடத்தில் கவனத்தை செலுத்துவது நல்லது. இன்று நீங்கள் வெளியிடங்களுக்கு செல்லும் போது முக்கியமான காரியங்களை மேற்கொள்ளும் போது ஆரஞ்சு நிறத்தில் ஆடையோ அல்லது ஆரஞ்சு நிறத்தில் கைக்குட்டையோ எடுத்து செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே நீங்கள் காலையில் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்

ரிஷபம் : 

மனதில் துணிவும் தைரியமும் கொண்ட ரிஷபராசி அன்பர்களே…!! இன்று உத்தியோக மாற்றம் உறுதியாகும் நாளாக இருக்கும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேர்வார்கள். கல்யாண கனவுகள் நினைவாவதற்கான அறிகுறிகள் தோன்றும். ஆபரண சேர்க்கையும் உண்டாகும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டியிருக்கும். அலுவலக பணிகள் மூலம் டென்ஷன் ஏற்படும். கவனமாக பேசுவது நல்லது. இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் ஏற்படக்கூடும் கவனமாக இருங்கள்.

அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம்  சிலரை சண்டைகள் ஏற்படக்கூடிய சூழ்நிலையும் இருக்கும். ஆகையால் இன்று பொறுமையை கையாள்வது மிகவும் நல்லது. இன்று குடும்பத்தில் ஓரளவு மகிழ்ச்சியான சூழல் இருக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடையோ அல்லது ஆரஞ்சு நிறத்தில் கைக்குட்டையோ எடுத்து செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாகவே இருக்கும். அதுபோலவே நீங்கள் காலையில் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்

மிதுனம் : 

அனைவரையும் அன்பால் அரவணைத்து கொள்ளக்கூடிய மிதுன ராசி அன்பர்களே..!! இன்று புது வாழ்வில் புகழ் கூடும் நாளாக இருக்கும். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். தொலைபேசி வழித் தகவல் மகிழ்ச்சியை கொடுக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி சேர்க்க முயற்சி மேற்கொள்வீர்கள். இன்று தொழில் சிறப்பாக நடைபெறும். தொழிலில் இரட்டிப்பு லாபம் ஏற்படும். சேமிக்கக்கூடிய எண்ணத்தை மட்டும் வளர்த்துக் கொள்ளுங்கள். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் மட்டும் கொஞ்சம் தாமதம் ஏற்படும். ஆர்டர்கள் தொடர்பான காரியங்கள் தாமதத்தை கொடுக்கும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் வேலைப்பளு இருக்கும்.

சக ஊழியர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. வெளிநாட்டில் பணிபுரியும் அன்பர்களுக்கு அரசால் அனுகூலம் ஏற்படும். கடன்களில் இருந்து விடுபடவும் இன்றும் உகந்த நாளாக இருக்கும். தொல்லை கொடுத்தவர்கள் விலகிச் செல்வார்கள், ஏமாற்றுப் பேர்வழிகள் உங்களைவிட்டு விலகிச்செல்வார்கள். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் அடைய கூடும். ஆசிரியர்களின் சொல்படி நடந்து கொள்ளுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது, முக்கியமான  காரியத்திற்கு செல்லும் போது வெள்ளை நிறத்தில் ஆடையோ அல்லது வெள்ளை நிறத்தில் கைக்குட்டையோ எடுத்து சென்றால் அனைத்தும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே நீங்கள் காலையில் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்தும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்

கடகம் : 

காதலில் வயப்படக்கூடிய கடக ராசி அன்பர்களே..!! இன்று மக்கள் செல்வங்களால் மகிழ்ச்சி கூடும். அஸ்திவாரத்தோடு நின்ற கட்டிடப் பணிகளை மீதியும் தொடர்வீர்கள் குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் சின்ன சின்ன வாக்கு வாதத்தை மட்டும் தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து போவது நன்மையை  கொடுக்கும். பிள்ளைகளின் நலனில் அக்கறை வேண்டும். வீண் பேச்சைக் குறைப்பது நல்லது. எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் தாமதம் கொஞ்சம் இருக்கும். அடுத்தவருக்கு உதவி செய்யும்போது கவனம் வேண்டும்.

தொழில் வியாபாரிகளுக்கு லாபம் ஈட்டுவது இன்று சிறப்பான காலமாக இருக்கும். பணியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இன்று மனம் மகிழ்வாக காணப்படும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். ஆசிரியர்களிடம் பாராட்டுகளும் பெறக்கூடும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் -போது முக்கியமான காரியத்தை செய்யும்போது வெள்ளை நிற ஆடையோ அல்லது வெள்ளை நிறத்தில் கைக்குட்டையையோ எடுத்து செல்லுங்கள். அனைத்தும் சிறப்பாக இருக்கும். முடிந்தால் காலையில் எழுந்தவுடன் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்குவது சிறப்பு. வெற்றி வாய்ப்புகள் வந்து குவியும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் :  5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்

சிம்மம் : 

சிந்தனையின் சொற்பமாக விளங்கும் சிம்மராசி அன்பர்களே…!! இன்று இனிமையான நாளாக இருக்கும். நெருங்கிய உறவில் ஏற்பட்ட விரிசல் மறையும். தொலைதூரத்திலிருந்து வரும் தகவல் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணை புரியும். வெளிவட்டாரப் பழக்க வழக்கங்களும் விரிவடையும். இன்று எதிர்ப்புகள் விலகி செல்லும் பணவரவு திருப்திகரமாக இருக்கும். இன்று புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். வாகனங்களை ஓட்டிச் செல்லும்போது கவனமாக ஓட்டிச் செல்லுங்கள். தேவையான பொருட்களை மட்டும் தயவு செய்து வாங்குங்கள். அதேபோல பொருட்களையும் கவனமாக பாதுகாத்து  கொள்வது அவசியம். தனிமையாக இருக்க நினைப்பீர்கள். தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும்.

ஆர்டர்கள் கிடைத்தாலும் சரக்குகளை அனுப்புவது தாமதமாகத்தான் இருக்கும். அந்த விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருங்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். ஆனாலும் எதிர்பார்த்த படி இருப்பது கொஞ்சம் சிரமம்தான். மற்றவரிடம் பேசும் போது கொஞ்சம் கவனமாக பேசுங்கள். இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடைய கூடும். ஆசிரியரிடம் நல்ல பெயர் எடுக்க கூடும். இன்று நீங்கள் வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடையோ அல்லது கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்து காரியமும் நல்லபடியாக நடக்கும். இன்று நீங்கள் காலையில் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்தும் சிறப்பாக இருக்கும். இதை செய்து பாருங்கள்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறம்

கன்னி : 

எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் கொண்ட கன்னி ராசி அன்பர்களே..!! இன்று சகோதர வழியில் சகாயம் கிட்டும் நாளாக இருக்கும். தொழில் முன்னேற்ற பாதையை நோக்கி செல்லும். குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். நட்பால் நன்மை கிட்டும். இன்று அடுத்தவர்களின் பிரச்சினையில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. தெய்வபக்தி அதிகரிக்கும். ஆக்கப்பூர்வமான யோசனைகள் தோன்றினாலும் அதை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்படும். அதை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள். பேச்சை கட்டுப்படுத்திக் கொள்வது மிகவும் நல்லது.

மற்றவர்களுடன் கருத்து வேற்றுமை ஏற்படாமல் கவனமாக இருப்பது நல்லது. மேலிடத்தில் இருந்து வந்த கருத்து மோதல்கள் நீங்கும். நினைத்தபடி பணம் வரவை இன்று பெறமுடியும். லாபத்தையும் பெறுவீர்கள். இன்றைய நாள் ஓரளவு மகிழ்ச்சியாகவே இருப்பீர்கள். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை அடைய கூடும். ஆசிரியர்களின் சொல்படி மட்டும் நடந்துக் கொள்ளுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது அல்லது முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அல்லது வெள்ளை நிறத்தில் கைக்குட்டையோ எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் சிறப்பாக இருக்கும். ஆதாயமும் கிடைக்கும்.

இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட  எண் : 1 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் இளம் மஞ்சள் நிறம்

துலாம் : 

மற்றவர்களுக்கு தோள் கொடுத்து உதவக் கூடிய துலாம் ராசி அன்பர்களே..!! இன்று இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். உங்களின் நிர்வாகத் திறமைக்கு பாராட்டுக்கள் கிடைக்கும். இடம், பூமி வாங்கி சேர்க்கும் எண்ணம் உருவாகும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். இன்று எந்த காரியத்தையும் செய்து முடிப்பதில் தாமதம் மட்டும் இருக்கும். பகைவர்களால் ஏற்படும் சிறு தொல்லைகளை சமாளிக்க வேண்டியிருக்கும். புதிய நண்பர்களுடன் பழகும் போது கவனமாக பழகுங்கள். தொழில் வியாபாரம் நிதானமாக தான் நடக்கும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான முயற்சியில் சாதகமான பலனை கொடுக்கும். மறைமுகப் போட்டிகளால் நெருக்கடிகளை இன்று சந்திக்கக்கூடும்.

அந்த விஷயத்தில் கவனமாக இருங்கள். உங்களை பார்த்து மற்றவர்கள் பொறாமைப்பட கூடும். இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடைய கொஞ்சம் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். ஆசிரியரின் சொல்படி தயவுசெய்து நடந்து கொள்ளுங்கள். சக மாணவர்களிடம் எந்தவிதமான பிரச்சினைகளும் வேண்டாம். இன்று பொறுமையைக் கையாண்டாலே போதுமானதாக இருக்கும். இன்று நீங்கள் முக்கியமான காரியங்களை செய்யும்போது அல்லது முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது வெள்ளை நிற ஆடையோ அல்லது வெள்ளை நிறத்தில் கைக்குட்டையோ எடுத்துச் செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே நீங்கள் காலையில் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்து விஷயமும் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்

விருச்சிகம் : 

நேர்மையான எண்ணம் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே..!! இன்று அத்தியாவசிய பொருட்களை வாங்கி அகம் மகிழும் நாளாக இருக்கும். இன்று இடமாற்றம், ஊர்மாற்றம் அல்லது நாடு மாற்றம் போன்றவை ஏற்படக் கூடிய சூழல் இருக்கும். உறவினர்கள் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்புகளும் இருக்கும். இன்று தொழில் வியாபாரம் சற்று நிதானமாக தான் நடக்கும். எதிர்பார்த்த லாபம் இருந்தாலும் தொழில் தொடர்பான செலவுகள் கூடும். சரக்குகளை வாங்கும் போது கவனித்து வாங்குவது பாதுகாப்பாக வைப்பது நல்லது. இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாகவே பணியாற்ற வேண்டி இருக்கும். பதவி உயர்வு கிடைக்கலாம். நிதானமாகப் பேசி மற்றவரிடம் அனுசரித்துச் செல்வது காரிய வெற்றிக்கு வழிவகுக்கும்.

இன்றைய நாள் ஓரளவு மகிழ்ச்சியாகவே இருக்கும். சொன்ன சொல்லையும் காப்பாற்றி விடுவீர்கள். ஆனால் இனிமேல் யாருக்கும் எந்தவித வாக்குறுதியும் தர வேண்டாம். அந்த விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருங்கள். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். ஆசிரியர்களின் சொல்படி நடந்து கொண்டால் இன்று பாராட்டுகளை அனுபவிக்க முடியும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுது நீல நிற ஆடையோ அல்லது நீல நிறத்தில் கைக்குட்டையோ  எடுத்துச் சொல்லுங்கள். அனைத்து காரியமும் சிறப்பாகவே இருக்கும். அதுபோலவே காலையில் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். தயவுசெய்து இதை முயற்சித்து பாருங்கள்.

இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் பச்சை நிறம்

தனுசு : 

தக்க சமயத்தில் அனைவருக்கும் உதவிகளைச் செய்து பாராட்டுகளைப் பெறக்கூடிய தனுசு ராசி அன்பர்களே..!! இன்று சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாளாக இருக்கும். வாழ்க்கை தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். இன்று தொழிலில் எதிர்பார்த்தபடி லாபம் கிடைக்கும். அலைச்சலுக்கு ஏற்ற ஆதாயம் உண்டாகும். இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபப்படாமல் நிதானமாகப் பேசி அனுசரித்துச் செல்வது நல்லது. சகோதரர் வகையில் உதவி  கிடைப்பதில் தாமதம் ஏற்படும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் இருக்கட்டும் கணவன் மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபம் நீங்கும்.

விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். ஆடை ஆபரணங்கள் வாங்கும் எண்ணம் அதிகரிக்கும். இன்று எல்லாவற்றிலுமே முன்னேற்றம் ஏற்படும். மாணவர்கள்  கல்வியில் முன்னேற்றகரமான சூழலை சந்திக்கக்கூடும். அனைவரின் ஒத்துழைப்போடும் இன்று கல்வியில் முன்னேறக் கூடும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுது பச்சை நிற ஆடையோ அல்லது பச்சை நிறத்தில் கைக்குட்டையோ எடுத்து செல்லுங்கள். அனைத்து காரியமும் சிறப்பாக இருக்கும். முடிந்தால் காலையில் எழுந்தவுடன் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்குங்கள். அனைத்தும் சிறப்பாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் வெள்ளை நிறம்

மகரம் : 

தைரியத்தோடு போராடும் குணம் கொண்ட மகர ராசி அன்பர்களே..!! இன்று ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமைத்துக் கொள்ளும் நாளாக இருக்கும். வரவு திருப்திகரமாக இருக்கும். சமுதாயத்தில்  உங்கள் அந்தஸ்து உயரவழி பிறக்கும்.  தொலைபேசி வழித் தகவல் தொலை தூர பயணத்திற்கு உறுதுணை புரியும். இன்று எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சில திட்டங்களை ஆலோசிப்பீர்கள். எந்த சூழ்நிலையிலும் மனம் தளராது விடாமுயற்சியுடன் காரியங்களை செய்வீர்கள். வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சிலருக்கு மருத்துவ செலவுகள் ஏற்படும். வீட்டை விட்டு வெளியே தங்கவும் நேரிடும். கடன் விவகாரங்களில் கவனமாக இருங்கள். உப தொழில் தொடர்பான காரியங்கள் தாமதமாகத் தான் நடக்கும்.

இன்று ஓரளவு உபரி வருமானம் கிடைக்கும் நாளாக இருக்கும். மணமும் கொஞ்சம் மகிழ்ச்சியாக காணப்படும். வெளியூர் பயணங்களின் போது கொஞ்சம் கவனமாக செயல்படுங்கள். இன்று உற்றார் உறவினர்கள் வகையிலும் கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ளுங்கள். இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேறுவதற்கு கொஞ்சம் கவனமாக செயல்பட வேண்டும். ஞாபக மறதியால் சில பொருட்களை வீட்டிலே வைத்து செல்ல நேரிடும். அந்த விஷயத்தில் கொஞ்சம் பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுது மஞ்சள் நிற ஆடையோ அல்லது மஞ்சள் நிறத்தில் கைக்குட்டையோ எடுத்து சென்றால் அனைத்து காரியமும்  சிறப்பாகவே இருக்கும். அதுபோலவே காலையில் எழுந்தவுடன் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்தும் வெற்றி பெறக் கூடிய சூழல் இருக்கும்.

இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் இளம் பச்சை நிறம்

கும்பம் : 

அனைவரையும் குதூகலப்படுத்தும் கும்பராசி அன்பர்களே..!! இன்று புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் நாளாக இருக்கும். சான்றோர்களின் சந்திப்பு கிடைக்கும். வீடு கட்ட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். நேற்றைய சேமிப்பு இன்று செலவுக்கு கைகொடுக்கும். இன்று அலுவலகத்தில் மேலிடத்திற்கு பயந்து வேலை செய்ய வேண்டியிருக்கும். உழைப்பு அதிகரிக்கும். நண்பர்களுடன் கருத்து வேறுபாடு கொஞ்சம் உண்டாகலாம் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் வசம் உள்ள ஆவணங்களை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள். சொத்து விவகாரங்களில் கவனம் இருக்கட்டும். எதிர்பாராத செலவு இருக்கும். நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படும்.

வங்கிக் கடனுக்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்துசேரும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு தேடி  வரக்கூடும். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். ஆசிரியரின் சொல்படி மட்டும் நடந்து கொள்ளுங்கள். சக மாணவருடன் எந்தவிதமான சண்டையும் வேண்டாம். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது முக்கியமான காரியத்தை எதிர்கொள்ளும்போது மஞ்சள் நிற ஆடையோ அல்லது மஞ்சள் நிறத்தில் கைக்குட்டையோ எடுத்துச் செல்லுங்கள். அனைத்து காரியமும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே நீங்கள் காலையில் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் வெற்றி பெறும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் இளம் நீல நிறம்

மீனம் : 

அதிக தெய்வபக்தி கொண்ட மீனராசி அன்பர்களே..!! இன்று ஓரளவு மகிழ்ச்சி குறையும் நாளாகவே இருக்கும். தேவையில்லாத விஷயத்திற்காக நீங்கள் மனம் குழம்ப கூடும். மாற்றுக் கருத்துடையோர் எண்ணிக்கை அதிகரிக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. நாவில் கவனம் செலுத்தினால் நாணய பாதிப்பில் இருந்து தப்பிக்க இயலும். இன்று தைரியமாக எந்த காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். சகோதரர் மூலம் நன்மை உண்டாகும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும்.  வாகனங்களை ஓட்டிச் செல்லும் பொழுது கவனமாக ஓட்டிச் செல்லுங்கள். தொழில் வியாபாரம் தொடர்பான விவகாரங்களில் தாமதம் ஏற்படக்கூடும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதற்கு அலைய வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இடமாற்றம், பதவி இறக்கம் ஆகியவற்றை சந்திக்கக்கூடும். ஆகையால் மேலதிகாரியிடம் பேசும்போது கவனமாக பேசுங்கள். எந்தவித வாக்குவாதங்களும் வேண்டாம். இன்று மாணவர்கள் கல்வியில்  முன்னேறுவதற்கு கொஞ்சம் கடுமையாகத்தான் உழைக்க வேண்டியிருக்கும். ஞாபகமறதி போன்றவை இருக்கும் அதையும் பார்த்துக்கொள்ளுங்கள். சரியான பொருட்களை எடுத்துச் செல்லுங்கள். இன்று மாணவர்கள் கல்வியில் ஓரளவு முன்னேற்றம் பெறலாம். சக மாணவரிடம் பேசும் போது கொஞ்சம் கவனமாக பேசுங்கள். சண்டை சச்சரவு வரும் என்பதால் கொஞ்சம் பொறுமையாக இருப்பது நல்லது. இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது அல்லது முக்கியமான காரியங்களுக்கு செல்லும் பொழுது நீல நிறத்தில் ஆடை அல்லது நீல நிறத்தில் கைக்குட்டையை  எடுத்துச் செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாகவே இருக்கும். அதுபோலவே காலையில் நீங்கள் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய  நாளை தொடங்கினால் அனைத்து காரியமும் சிறப்பாக இருக்கும். தயவு செய்து இதனை மட்டும் நீங்கள் முயற்சி செய்து பாருங்கள்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு

அதிஷ்ட எண் : 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் பச்சை நிறம்

Categories

Tech |